திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சொத்து தகராறில் தாயை தாக்கிய மகன்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன் கொள்ளை மேடு கிராமத்தில் சுப்பராயன்-பவுனு என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அய்யனார் என்ற உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அய்யனார் தனது தாயிடம் சொத்து கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அய்யனார் தனது மகன் மணிகண்டன் உடன் சேர்ந்து தாய் பவுனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், இதனை தடுக்க வந்த பவுனுவின் மகள் பழனியம்மாளின் பேத்தி கௌதமி ஆகியோரையும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பவுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அய்யனாரை கைது செய்துள்ளனர்.