ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பெற்றோருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய மகன்.! புகழ்ந்து தள்ளும் பொதுமக்கள்.!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் தாய் தந்தை மீதுள்ள தீராத பாசத்தால் அவர்களுக்கு கோயில் கட்டி ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடத்தி வருவது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
உடுமலைப்பேட்டை அருகே உள்ள தீபாலபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் அவரது பெற்றோர் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர். இந்தநிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாய் மற்றும் தந்தை இறந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன் படி, கோயில் கட்டிய அவர், நேற்று அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு பெற்றோருக்கு கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இந்த கும்பாபிஷேகம் காரணமாக சொந்தபந்தம், கிராமமக்கள் என 500க்கும் மேற்பட்டோரை அழைத்து தடபுடலாக விருந்து வைத்து அசத்தியுள்ளார். இந்த கும்பாபிஷேகத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ரமேஷ்குமாரை வாழ்த்தி செல்கின்றனர்.