தாயின் கழுத்தை அறுத்து மகன் செய்த கொடூரம்! பதறிய பொதுமக்கள்!



son killed his mother

சென்னையை பள்ளிக்கரணை சாய்கணேஷ் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரின் வயது 78. இவரின் மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 42 வயதில் ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார்.  பாலகிருஷ்ணன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சரஸ்வதி தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

ரமேஷிற்கு திருமணமான நிலையில் அவருக்கு மனநலம் சரியில்லை என கூறி அவருடைய மனைவி, ரமேஷை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டதாக கூறப்படுகிறது. தந்தை இறந்துவிட்டநிலையில் தாய் சரஸ்வதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மனவேதனையில் இருந்துள்ளார் ரமேஷ். 

ஒருகட்டத்தில் நாம் வாழ வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளலாம் என தாயிடம் கூறி உள்ளார் ரமேஷ். இந்தநிலையில் நேற்று காலை ரமேஷ், பெற்ற தாய் என்று நினைக்காமல் தாயின்  கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

mom

இதனையடுத்து ரமேஷ் தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டார். அப்போது வயிற்றில் குத்திய கத்தி, வயிற்றிலேயே மாட்டிக்கொண்டதால் வலியால் அலறி துடித்தார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சரஸ்வதி இறந்து கிடப்பதையும், வயிற்றில் கத்தி குத்தப்பட்ட நிலையில் ரமேஷ் வலியில் துடிப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து சம்பவம் குறித்து காவல்துறைக்கு  தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வயிற்றில் கத்தியுடன் உயிருக்கு போராடிய ரமேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.