திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இரயில் பயணத்தில் இதை செய்தால் அபராதம், 3 மாத சிறை - தென்னக இரயில்வே எச்சரிக்கை.! பயணிகளே உஷார்.!!
இளைஞர்களின் விபரீதத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க தென்னக இரயில்வே சில அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளது.
சமீபமாகவே இரயில்வே தண்டவாளங்களில் நின்று செல்பி எடுத்து, அதனை ஆபத்தான வகையில் கடந்து செல்வது, இரயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது போன்றவை அதிகளவு நடந்து வருகிறது. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. செங்கல்பட்டில் 3 இளைஞர்கள் தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ செய்து இரயில் மோதி பலியாகினர்.
இந்த நிலையில், தென்னக இரயில்வே பயணிகளுக்கு கனிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், "இரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பது தவறானது, ஆபத்தானது. அதனால் இனி வரும் நாட்களில் இரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அதனைப்போல, இரயில்களில் பயணம் செய்வோர் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தால் அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்த மறுப்பு தெரிவித்தால் 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும். மக்கள் கவனமுடன் பயணம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.