மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
FLASH: இரயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் இனி 6 மாதம் சிறை, ரூ.1000 அபராதம்; தென்னக இரயில்வே அதிரடி.!
தண்டவாளத்தை அலட்சியமாக தவறான இடத்தில் கடப்பது, தண்டவாளத்தின் நடுவே நடப்பது, தண்டவாளத்தில் விளையாடுவது போன்றவை ஆபத்தான காரியங்கள் மட்டுமல்லாது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.
இரயில் பாதை அல்லது ரயில் எஞ்சின் அருகே செல்பி எடுக்கும் மோகம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், இவ்வாறான செயல்களில் யாரேனும் இனிவரும் காலங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிந்து ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது ரூபாய் 1000 அபராதம் ஆகியவை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.