53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு..!
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகளின் காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வார நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் 30 சதவீதமாக மின்சாரரயில்கள் இயக்குவது குறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் ஜூன் 4 மற்றும் 5ஆம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் நடைபெற இருக்கிறது.யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில், சென்னை புறநகர் ரயில்கள் வாரநாட்களில் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், கடற்கரை - செங்கல்பட்டு, கடற்கரை - வேளச்சேரி, சென்ட்ரல் - சூலூர்பேட்டை போன்ற ரயில்கள் வாரநாட்களின் அட்டவணையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.