மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
இந்த வருடம் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும். ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழையானது நேற்று மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒட்டுமொத்த அந்தமான் நிக்கோபர் பகுதி, வங்கக்கடலில் கிழக்கு மத்திய பகுதிகளில் அடுத்த இரண்டு மூன்று தினங்களில் சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 க்கு பதிலாக மே இருபத்தி ஏழாம் தேதியே பெய்யக்கூடும் என்றும், அசானி புயலின் எச்சங்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் வட மாநிலங்கள் மாற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் கூடுதலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், இமயமலை அடிவாரம் வடமேற்கு இந்தியாவில் இதே நிலை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு வடமேற்கு தென்பகுதி இயல்பை விட குறைவான அளவிலேயே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.