திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு.!



Special buses for 2023 karthigai dheepam

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தீப திருவிழா நாளில் திருவண்ணாமலையில் மிகவும் விசேஷமாக தீபத்திருவிழா கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு வரும் நவம்பர் 26ஆம் தேதி தீபத்திருவிழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

Thiruvannnamalai

இதற்கான முன்னேற்பாட்டை கோவில் நிர்வாகம் சார்பிலும் மாவட்ட நிர்வாகிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தொடர்ந்து 3 நாட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 

தொடர்ந்து பல்வேறு கோட்டங்களில் இருந்தும் 2700 பேருந்துகளை போக்குவரத்து துறை திருவண்ணாமலை கோவிலுக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார். 

Thiruvannnamalai

இந்த முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஆணையர் சண்முகசுந்தரம், "பக்தர்கள் கார்த்திகை தீபத்தன்று தரிசனம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில், 2700 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகிறது. மேலும், கிரிவலப் பாதையில் பக்தர்கள் யாருக்கும் வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது." என்று தெரிவித்துள்ளார்.