பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
இனி பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு.! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி.!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் புகார் குறித்து காவல்துறையினர் தற்போது ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டிப்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் - மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது. பாலியல் புகார் கூறப்பட்ட ஆசிரியரை கல்வி நிறுவனம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இந்தநிலையில், ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களுக்கு தனி குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளோம்.
ஆன்லைன் வகுப்புகளால் இனி பிரச்சனை வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் வரக்கூடாது என்பதற்காக பாலியல் புகார் விவகாரத்தில் குழு அமைக்கப்படும். இது தொடர்பான புகார்களை விசாரிக்க பெண் ஆசிரியர் ஒருவர் இதற்கு தலைமை வகிப்பார் என தெரிவித்தார்.