#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இளம் மனைவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக கதறி அழுத சப்-இன்ஸ்பெக்டர்.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிருஷ்ணகிரி டேம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்பவருடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் ரமேஷ் குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி ரமேஷின் மனைவி ராஜலட்சுமி வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக ரமேஷ் பலரிடமும் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, ராஜலட்சுமியின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கருதிய போலீசார் ராஜலட்சுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து பிரேத பரிசோதனையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் ரமேஷிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் குடும்ப தகராறில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பின்னர் கொலையை மறைக்க மாரடைப்பால் இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரமேஷை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.