மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுக்கோட்டை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! திருப்பதிக்கு வாராந்திர சிறப்பு ரயில்.! முழு விபரம்.!
ராமேஸ்வரம் - செகந்திராபாத்துக்கு இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தென் மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில் இன்று அக்டோபா் 19 முதல் டிசம்பா் 28 வரை செவ்வாய்க்கிழமைகளில் செகந்திராபாத்திலிருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 3.10 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும்.
அதேபோல் ராமேஸ்வரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபா் 21 முதல் டிசம்பா் 30 வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் ராமேஸ்வரம், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூா், கூடூா், ரேணிகுண்டா, திருப்பதி, நெல்லூா், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூா், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்கள் புதுக்கோட்டையிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 03:40 மணிக்கு புறப்பட்டு திருப்பதிக்கு மாலை- 05:05 மணிக்கு செல்லும். புதுக்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு கட்டணம் விவரம்: இருக்கை வசதி(2S) 205, படுக்கை வசதி (SL) 420, குளிர்சாதன வசதி(3AC) 1150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.