தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சென்னை பிரியாணி கடையில் 3½ டன் கெட்டுப்போன இறைச்சி.! உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள ஒரு பிரபல பிரியாணி நிறுவனத்திடம் 3600 கிலோ மட்டன் மற்றும் சிக்கன் இறைச்சியை ஆர்டர் செய்து இருந்தனர். அந்த பிரியாணி நிறுவனம், 3½ டன் இறைச்சியை வழங்கும்படி ஆன்-லைனில் உணவு வழங்கும் நிறுவனத்திடம் ஆர்டரை ஒப்படைத்தது.
அதன்படி அந்த ஆன்லைன் உணவு நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் இருந்து 3½ டன் ஆடு மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்தப்பட்ட லாரியில் திருமண வீட்டுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் திருமண விழாவில் சமையல் செய்ய பயன்படுத்தியபோது அந்த இறைச்சி கெட்டுப்போனதால் துர்நாற்றம் வீசியது. உடனே கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தாமல் சென்னையில் உள்ள பிரியாணி நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பினர்.
இதுபற்றி அந்த பிரியாணி நிறுவனம் சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறையின் நியமன தலைவர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள பிரியாணி நிறுவன சமையல் கூடத்துக்கு சென்று அங்கிருந்த கெட்டுப்போன இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இறைச்சியின் ஒரு பகுதியை ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாகவும் சென்னையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கும் அனுப்பி ஆய்வு செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.