திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்கள் விடுதலை; பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு.!
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 க்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த மாதம் 21 ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றபோது, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழக மீனவர்களை மீட்டுவர கோரிக்கை
இவர்களை தாயகம் அழைத்து வர வேண்டும் என அரசுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை முன்வைத்த நிலையில், மாநில அரசு மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மீனவர்களை மீட்டு வர கோரிக்கை முன்வைத்து இருந்தது. இதன்பேரில் இலங்கை அரசிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொலை மிரட்டல்.!! 55 வயது கூலி தொழிலாளி தப்பியோட்டம்.!!
37 பேரும் விடுதலை செய்து ஆணை
இந்நிலையில், தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்த இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களின் 3 படகுகளை அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் விடுதலை செய்யப்பட்ட அனைவரும் இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: புதிய உச்சம் தொடப்போகும் தங்கம், வெள்ளி விலை.. இன்று கிடுகிடு உயர்வு.!