ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர்; மனித உரிமை மீறலில் ஈடுபட்டதால்.... மீனவர்கள் கொந்தளிப்பு...!!
இலங்கை கடற்படையினர் இரக்கமே இல்லாமல் தமிழக மீனவர்களை நீதிமன்றங்களுக்கு ஒரே சங்கிலியில் கட்டி இழுத்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச்சூடு நடத்துவதும் வாடிக்கையாகிவருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கைது செய்யப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு சிறைத்துறையினர் அழைத்து வந்த காட்சி வெளியாகியுள்ளது.
தமிழக மீனவர்கள் 12 பேரையும் ஒரே சங்கிலியால் கட்டி மனிதாபிமானமே இல்லாமல் இலங்கை சிறைத்துறை அதிகாரிகள் இழுத்து வருகின்றனர். இலங்கை அரசின் இந்த செயலுக்கு நாகை மீனவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது வேதனை அளிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.