குடியுரிமை பெறாமல் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை தமிழ் பெண் கைது.!



Srilankan tamil girl arrested for Indian visa

இலங்கை மத்திய மாகாணம் லூவராகினியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமாவதி (வயது 35). இவர் மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் பிரதாப் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது கணவரின் ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதில் நேற்று முன்தினம் உமாவதி இலங்கை செல்ல மதுரை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

madurai

அப்போது அங்கே குடியுரிமை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் இலங்கை தமிழில் பேசியதால் அதிகாரிகள் சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர்.

madurai

இந்த விசாரணையில் அவர் மதுரை சேர்ந்த பிரதாப் குமரை திருமணம் செய்ததும், கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை விசா மூலம் இந்தியா வந்ததும் தெரிய வந்தது. மேலும் இலங்கை குடியுரிமையை மறைத்து சட்ட விரோதமாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இந்திய பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து உமாவதியை போலீசார் கைது செய்தனர்.