11 நாள்களுக்கு பின்னர் மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம்.! கதறி அழுத தாய்-தந்தை.!



srimathi burial ceremony

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஸ்ரீமதி உடல் நல்லடக்கம் செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழகம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அங்கு 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது.

பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டதுடன் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இரண்டு முறை  முறை ஸ்ரீமதியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பெற்றோர் உடலை வாங்கினர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான் பெரிய நெசலூருக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து ஸ்ரீமதியின் உடலுக்கு சடங்குகள் செய்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீமதி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அங்கு வெளிநபர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. மேலும், அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.