ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அந்த 7 பேர்தான்..என் மகள் வேரறுத்துடுவா.! மகளை புதைத்தபின் ஸ்ரீமதி தந்தை ஆவேசம்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூன் 12ஆம் தேதி உயிரிழந்தார். பள்ளியில் 3வது மாடியிலிருந்து குதித்து ஸ்ரீமதி தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளி தரப்பிலிருந்து கூறப்பட்டது. இதற்கிடையில் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகமடைந்த மாணவி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்த விவகாரம் பூதாகரமாகவே மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது வன்முறையாக மாறி பள்ளி வாகனங்கள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டது. மேலும் பெற்றோர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்தனர். அதனைத் தொடர்ந்து இருமுறை ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பெற்றோர் உடலை வாங்கி கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பெரிய நெசலூருக்கு கொண்டுவரப்பட்டு பெற்றோர்கள், உறவினர்கள் கதறி கண்கலங்க இறுதி சடங்குகள் நடைபெற்றது. பின்னர் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாலும், பிரேத பரிசோதனையில் பெற்றோருக்கு திருப்தி இல்லாததாலும் தேவைப்பட்டால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யும் வகையில் மாணவியின் உடல் புதைக்கப்பட்டது.
ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவரது தந்தை பேசுகையில், என் மகளை எதற்காக மண்ணுக்குள் புதைத்தேன் என தெரியவில்லை. எனக்கு நீதி வேண்டும், அவர்களுக்கு மரண தண்டனை வேண்டும். சிபிசிஐடி சரியாக வழக்கை நடத்தும் என நினைக்கிறேன்.
இதில் சம்மந்தபட்டது பள்ளிக்கூடத்தை சேர்ந்த அந்த 7 பேர் தான். என் மகளை இன்று புதைக்கவில்லை, விதைத்துள்ளேன். விதை மரமாக வந்து அவர்கள் குடும்பத்தை வேரறுக்காமல் விடாது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.