மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ஸ்ரீபெரும்புதூரில் ரௌடி நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை; தமிழ்நாட்டில் அடுத்த பயங்கரம்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், மன்னூர் பகுதியில், ரௌடியான எபனேசர் என்பவர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, ஆட்டோவை இடைமறித்த கும்பல், ரௌடி எபனேசரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி இருக்கிறது. பின் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.
கொலையான எபனேசரின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் போதை கும்பலால் பாஜக பிரமுகர் குடும்பம் கொலை செய்யப்பட்ட்ட நிலையில், தற்போது ரௌடியின் கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.