முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்!! பதவியேற்பு விழாவில் ஆனந்த கண்ணீர் விட்ட ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்..!



Stalin wife Durga stlain cries when stalin takes charge of CM

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபோது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் இன்று பதவியேற்றார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றார். கொரோனா காரணமாக பதவியேற்பு விழா மிக எளிமையாக நடத்தப்பட்டது.

Durga Stalin

இன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து தமிழகத்தின் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

ஆளுநர் ஸ்டாலினுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்போது. ஸ்டாலின் எனும் நான் என ஆளுநர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். அப்போது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்தாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டார்.