மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உச்சகட்ட பதட்டத்தில் மக்கள்! திடீரென குவிக்கப்படும் போலீசார்! மாவட்ட ஆட்சியர் புது அறிவிப்பு!
ஸ்டெர்லைட் ஆலையினால் அதிகம் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் சுற்று சூழல் பாதிப்படைந்து ஏகப்பட்ட நோய்கள் மக்களை தாக்குவதாகவும் இதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்று நீண்ட நாட்களாக தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் இந்த போராட்டத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் கலவரமாக வெடித்தது.
கடந்த மே மாதம் 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட கோரி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் வழக்கு தொடர்ந்தது. ''ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாமா என்பதை ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஓன்று அமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழுவின் அறிக்கையில், ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது எனவும், சில கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம்'' என்றும் தெரிவித்தது.
இவர்களின் தீர்ப்பு மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 5 பேரின் உயிரை பலிவாங்கிய பின்பும் ஆலையை மீண்டும் திறப்பதா? என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களின் கண்டன குரலை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, ''தூத்துக்குடி மாவட்டத்தில் முன்பு நடந்தது போல் போராட்டம் ஏதும் மக்கள் நடத்த திட்டமிட கூடாது. ஆலையை மீண்டும் திறக்க விடாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய அனுமதி இல்லாமல் யாரும் போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.