திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லையா..? நாளை மாவட்டம் தோறும் சிறப்பு முகாம்...!!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வாக்காளர்கள் தங்களது அதார் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைக்காமல் இருந்தால், அவர்களுக்காக வருகின்ற 19.03.2023 ஞாயிற்றுக்கிழமையன்று மாவட்டம் தோறும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில் இருக்கும் வாக்குசாவடி மையங்களில், தங்களுடைய ஆதார் மற்றும் வாக்காளர் பதிவு எண் விவரங்களை படிவம் 6B -யில் பூர்த்தி செய்து வாக்குசாவடி மைய அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.