மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆளும்கட்சி எம்.எல்.ஏ கார் மீது கல்வீசி தாக்குதல்: பிரபல கட்சியின் முக்கிய பிரமுகர் கைது..!
மகாராஷ்டிரா, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே நேற்று பொது கூட்டமொன்றில் கலந்து கொண்டார். சிவசேனா கட்சியின் இந்த கூட்டம் நடைபெற்ற பகுதி வழியாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் தலைமையிலான சிவசேனா அணியின் எம்.எல்.ஏ உதய் சமந்த் என்பவரது கார் ஒன்று சென்றுள்ளது.
அப்போது அந்த காரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில், அந்த வாகனத்தின் பின்புற கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த சமந்த், மராட்டிய மாநிலத்தில் இதுபோன்ற அரசியல் நடைபெறுவது கிடையாது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள், தங்கள் கைகளில் பேஸ்பால் பேட்டுகள் மற்றும் கற்களை வைத்திருந்தனர்.
எனக்கு முன்னால் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. அவர்கள் என்னை பின் தொடருகின்றனரா? அல்லது முதலமைச்சரை பின் தொடர்கிறார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும், இதுபோன்ற சம்பவங்களால் தன்னை அச்சுறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது கோழைத்தனமான செயல் என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியதுடன், மராட்டிய மாநிலத்தில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், சிவசேனா நகர தலைவர் சஞ்சய் மோரே உள்பட 5 பேரை செய்துள்ளனர்.