மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கும்பல் கும்பலாக திரியும் தெரு நாய்கள்.! ஆலங்குடி அருகே விவசாயியின் ஆடுகளை கடித்து குதறிய தெரு நாய் கூட்டம்.!
தற்போது பல இடங்களில் தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும், வாகனங்களுக்கு குறுக்கே ஓடி விபத்தை எற்படுத்துவதும் அவ்வப்போது நடக்கிறது. மேலும் பல இடங்களில் தனியாக செல்பவர்களை துரத்தி சென்று கண்டிக்கின்றது தெரு நாய்கள். அதிலும் இந்த கொரோனா ஊரடங்கு நாட்களில் பல இடங்களில் கும்பல் கும்பலாக திரிகின்றது தெரு நாய்கள்.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மெக்கேல்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்ற விவசாயி வெள்ளாடுகளை வளர்த்து வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று இரவு அவரது வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த 7 ஆடுகளின் கழுத்து பகுதியில் தெருநாய்கள் கடித்து குதறியுள்ளது. இதனால் அந்த ஆடுகள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதேபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் அடிக்கடி நடைபெறுவதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். ஆலங்குடி பகுதியில் உள்ள தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றித் திரிகின்றன. பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா சமயத்தில் தெருநாய்களின் அச்சுறுத்தல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.