திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாயமான மாணவி, பதறி அடித்து ஓடிப்போன பெற்றோர்..!!
தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டதிற்கு உட்பட்ட அரூர் பெரியார் நகரில் வசித்து வருபவர் குமரேசன். இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் அந்த பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர்து மகள் இனியவள். இவருக்கு வயது 19 . இவர் தருமபுரி மாவட்டதில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் மூன்றம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த மாதம் 13.06.2023 அன்று வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்பு, கல்லூரி நேரம் முடிந்தும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனை அறிந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார்கள்.
இதற்கிடையே, பல இடங்களில் தேடி பார்த்தும் தனது மகளை கண்டுபிடிக்க முடியாமல் அவரது பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளார்கள். இதனால் தனது பெண் காணவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார்கள். பின்னர், இனியவள் காணாமல் போனது குறித்து அவரது அண்ணன் இளவரசு அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அளிக்கப்பட புகாரின் அடிப்படியில், போலீஸார் காணாமல் போன மாணவியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.