மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்களே அலட்சியம் செய்யாதீர்கள்.. சாகச பயணங்களில் உயிரை விடும் மாணவர்கள்..! தினம் தினம் நடக்கும் பயங்கரம்..!!
இளைஞர்கள் தாங்கள் பயணம் செய்யும் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவாறு எடுத்து வெளியிடப்படும் வீடியோ இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் அதிகளவு வைரலாகிறது.
இவ்வாறாக தினம் தினம் வீடியோ வரும் நிலையில், நமக்கு என்ன நடந்துவிடும்? நாமும் அதனை செய்வோம் என பலரும் வீடியோவை பார்த்து தங்களின் சாகசம் என்று ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள் என பெற்றோர்களும் உயர்ந்த வாகனங்களை வாங்கி கொடுக்கின்றனர். அதற்காக தலைக்கவசம் கூட அணியாமல் இரண்டு பேர் பயணிக்கும் வாகனத்தில் நான்கு பேர், ஐந்து பேர் என அலட்சியமாக பயணம் செய்து வருகின்றனர்.
இதனால் பல இடங்களில் விபத்து ஏற்படுகிறது. பின் தாங்கள் பிள்ளைகளின் வாழ்வை நாமே கெடுத்துவிட்டோமே என பெற்றோர்கள் கதறுகின்றனர். எனவே பெற்றோர்கள் கவனமாகவும், யோசித்தும் முன்பே அவர்களுக்கு நல்லதை எடுத்துரைத்தால் அவர்களின் உயிரை காப்பாற்ற இயலும்.