10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த பள்ளி கல்வித்துறை! பயங்கர குஷியில் மாணவர்கள்!



students-happy-for-extra-exam-time

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது நடப்பு கல்வியாண்டிலேயே அமலுக்கு வரும் என  தமிழக  பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதற்குமுன்னர் பொதுத் தேர்வு எழுத  இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

11ஆம் வகுப்பிற்கு கடந்த ஆண்டு புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில் இந்த வருடம் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு நடைபெற உள்ளது. இந்த
புதிய பாடத் திட்டத்தின் படி தேர்வில் சிந்தித்து விடையளிக்கும் வினாக்கள் இருப்பதால் மாணவர்கள் அந்த கேள்விகளுக்கு விடையளிக்க கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதால் கூடுதல் நேரம் வழங்க கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

Students

இந்த நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு 3 மணி நேரத்தை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்  அறிவிக்கப்பட்ட தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் இந்த கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.