சுபஸ்ரீயின் அலுவலக நண்பர்கள் வெளியிட்ட அவரது இருக்கை மற்றும் கணினியின் புகைப்படங்கள்! கண்ணீர் வடிக்கும் தமிழக மக்கள்!



subashree office friends


சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. 23 வயதே நிறைந்த  இவர் அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகள் ஆவார்.  பி.டெக் படிப்பை முடித்த இவர் கனடா செல்வதற்காக தேர்வுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது ஒரு பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் இந்த சம்பவம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் டுவிட்டரில் பலரது கவனத்தை ஈர்த்த #WhoKilledShubashree என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சுபஸ்ரீயின் அலுவலக நண்பர்  டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘சுபஸ்ரீ எனது அலுவலக நண்பர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ என பதிவிட்டுள்ளார்.


மேலும், சுபஸ்ரீயின் இருக்கை மற்றும் கணினியின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். சுபஸ்ரீயின் இருக்கைக்கு அருகே மலர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் புகைப்படத்தில் ‘நாங்கள் சுபஸ்ரீயை அதிகம் நேசித்தோம், ஆனால் கடவுள் அதைவிட அதிகமாக நேசித்துவிட்டார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது பலரையும் கண்ணீர் கசியவைத்துள்ளது.