விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தூய்மை பணியாளர்.! திடீர் மரணம்.!.. காவல்துறையினரை குற்றம் சாட்டும் உறவினர்கள்.?



sudden-death-of-cleanliness-worker-taken-for-investigat

சென்னையில் விசாரணைக்கு சென்று திரும்பிய துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவரது சாவுக்கு காவல்துறை தான் காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் வயது 25. இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள விஜயலட்சுமி என்பவரின் வீட்டில் நகை திருடு போயிருக்கிறது. இது தொடர்பாக ஸ்ரீதரை விசாரிக்க காவல்துறையினர்  அழைத்துச் சென்றுள்ளனர்.

tamilnaduஅவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையின் அருமரு நாள் விசாரணைக்கு வரும்படி  கூறி அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று தனது மனைவியுடன் காவல் நிலையம் சென்று இருக்கிறார் ஸ்ரீதர் . விசாரணை முடிந்து வீடு திரும்பிய அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்.

tamilnaduவீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவலர்கள் தாக்கியதால் தான் ஸ்ரீதர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால்தான்  அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும்  மேலும் விசாரணையின் போது அவரை தாக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.