திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாலிடெக்னிக் மாணவர் விடுதியில் தற்கொலை.. மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்..!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். இவருக்கு விஜயன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் நாமக்கலில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இரண்டாமாண்டு பாலிடெக்னிக் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் விஜயனின் அறை கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகப்பட்ட அவரது நண்பர்கள் விடுதி பொறுப்பாளர் உதவியோடு கதவை திறக்க முயற்சித்துள்ளனர். அப்போது விஜயன் அறை உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் விடுதி பொறுப்பாளர் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் விஜயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தாய் வாங்கி கொடுத்த வெள்ளி நகை தொலைந்து விட்டதால் மனமுடைந்து விஜயன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மாணவரின் உறவினர்கள் விஜயன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் விஜயனின் உடலை வாங்க மறுத்துள்ளனர். அதன் பின் காவல்துறையினரின் பேச்சு வார்த்தை நடத்தியதில் மறியலை கைவிட்டனர். மேலும் விடுதி அறையில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.