பள்ளி வகுப்பறையில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி! அதிர்ச்சி சம்பவம்!



suiciede in school class room


ஐதராபாத் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி, அரசுப்பள்ளியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த கனகு என்ற இளைஞரும்  தாரா என்ற பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதனால் மனமுடைந்த இருவரும் புதன்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

suicide

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமையன்று லகுடராம் பகுதியில் உள்ள  உயர்நிலைப் பள்ளியில், மின்விசிறியில் தூக்கிட்டு இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.