மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காதா? பெட்ரோலிய சங்கம் விளக்கம்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களும், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என்று தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் பங்குகள் நாளை (14-ந்தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் மறுத்துள்ளது.
அணைத்து தினங்களிலும் பெட்ரோல் பங்க் செயல்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் பெட்ரோலிய சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். சமூகவலைத்தளங்களில் வந்த செய்தி வதந்தி. பொதுமக்கள் தவறான செய்தியை கேட்டு பீதி அடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.