மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பர்வைசர்.. பேதி மருந்து கலந்து ஆப்படித்த சிறுமிகள்; ட்விஸ்ட் வைத்த ஓனர்.!
தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பர்வைசருக்கு பாலில் பேதி மருந்து கலந்து சிறுமிகள் கொடுத்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள மணலி, மரத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயதாகும் 3 சிறுமிகள், குடும்பத்தின் வறுமையால் அங்குள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்த கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த சந்திரசேகர் (வயது 62) என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமிகள் சந்திரசேகரின் டீயில் பேதி மருந்து கலந்து கொடுத்திருக்கின்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் செந்தில் குமார், சிறுமிகள் மூவரையும் தாக்கி வேலையில் இருந்து நீக்கி இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன சிறுமிகள் வீட்டில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள மணலி காவல் துறையினர், கடையின் உரிமையாளர் செந்தில் குமார் மற்றும் சூப்பர்வைசர் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.