மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு.! முன்ஜாமீன் கோரி எஸ்.வி. சேகர் மனு!
இந்துக்கடவுள் முருகனை ஆபாசமாக சித்தரித்தது, மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது உள்ளிட்ட விவகாரங்களை பற்றி பேசி பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதலமைச்சர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்டு 15-ஆம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்கிற வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக அவரது இந்தப் பேச்சு இருப்பதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்ததுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.