மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உணவு டெலிவரிக்கு வந்த ஸ்விக்கி ஊழியரையே திணறவைத்த வாடிக்கையாளர்! வைரல் வீடியோ!
கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் உணவு டெலிவரி கொடுக்க சென்ற சொமேட்டோ ஊழியர் ஒருவர் தனது வாகனத்தை இடையே நிறுத்தி பார்சல் செய்யப்பட்ட உணவினை சாப்பிட்டுவிட்டு அதை அப்படியே மூடிவைத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு சிலர் அவர்களுக்கு சாப்பிட நேரம் ஒதுக்குங்கள் என ஆதரவாகவும் பேசினர்.
இந்நிலையில் தற்போது புத்தாண்டு சிறப்பாக உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான ஸ்விக்கி ஊழியர் ஒருவருக்கு வாடிக்கையாளர் ஒருவர் இன்பஅதிர்ச்சி கொடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த உணவை நள்ளிரவில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் டெலிவரி செய்தார், இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்வகையில் அந்த உணவை , வாடிக்கையாளரே ஊழியருக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
உங்களுக்காகத் தான் இதை ஆர்டர் செய்தேன் என்று கூறிய அந்த நபரின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர் பின்பு அந்த உணவினை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.