மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரளாவிற்கு உதவ முன்வந்துள்ள தமிழ் திரையுலக சகோதரர்கள்; ரூ.25 லட்சம் நிதியுதவி
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது.
கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இப்போது மழை பெய்து வரும் மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி உள்ளது.
வானிலை மைய எச்சரிக்கையையடுத்து கேரளாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிற்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. மேலும் திரை பிரபலங்களும், பிற மாநிலத்தவர்களும் கேரளாவிற்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலக பிரபலன்களான சகோதரர்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் இருவருக்கும் கேரளாவில் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.