மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இடுப்பு, தொடையில் கைவைத்து அழுத்தி தொல்லை - பைக் டேக்சி ஓட்டுநர் பரபரப்பு பேட்டி.. அதிர்ச்சி உண்மை அம்பலம்.!
தினமும் வாகனம் ஓடுவதால் முதுகு வலி ஏற்படும், சில ஆண்கள் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் தன்பாலின சேர்க்கை விருப்பத்துடன் அணுகுவார்கள் என ஓட்டுநர் தெரிவித்தார்.
Bike Taxi ஓட்டுநராக பணியாற்றி வரும் இளைஞர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "ஒரு நாளொன்றுக்கு எனக்கு ரூ.1000 வருமானம் கிடைக்கிறது என்றால், அதில் ரூ.300 க்கு பெட்ரோலுக்கு சென்றுவிடும். இந்த ரூ.1000 தினமும் கிடைக்குமா? என்றால் அது கேள்விக்குறியே.
நாள் முழுவதும் வாகனத்தை இயக்கி பயணம் செய்வதால் உடல் சோர்வு, முதுகு வலி போன்றவையும் ஏற்படும். சில வாடிக்கையாளர்கள் வாகனத்தை முன்பதிவு செய்துவிட்டு, நான் அவர்களின் வீட்டில் இருந்து 50 மீட்டர் அருகில் செல்லும் போது பயணத்தை இரத்து செய்வார்கள். நான் அவர்களின் இருப்பிடத்திற்கு 2 கி.மீ பயணம் செய்து வந்திருப்பேன்.
இளைஞர்கள் பொதுவாக பயணம் செய்பவர்கள் அமைதியாக இருப்பார்கள். தன்பாலின சேர்க்கை ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் இரவில் பயணம் செய்தால், அவர்களின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். வயதை கேட்பார்கள், சிலர் நான் தனியாக இருக்கிறேன் வருகிறீர்களா? என்றே கேட்பார்கள்.
50 வயது மதிக்கத்தக்க நபர் என்னுடன் வாகனத்தில் பயணம் செய்யும் போது அருவருக்கத்தக்க வகையில் என்னை கட்டியணைத்து பயணம் செய்தார். ஒருசிலர் குளிருக்கிறது என்று கட்டிப்பிடித்து, பின்னர் வீட்டிற்கு சென்றதும் வாருங்கள் தேநீர் குடித்துவிட்டு செல்லலாம் என்று கூறுவார்கள். இவை அனைத்தும் எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும்.
திருநங்கைகளும் என்னுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்திருக்கிறார்கள். ஒருசிலர் பேசக்கூட மாட்டார்கள். பயணம் செய்து சென்றுவிடுவார்கள். இன்னும் சிலர் மனம்விட்டு பேசுவார்கள். சம்பளம் சரியாக இருக்கிறதா? வீட்டில் அனைவரும் நலமா? என்று பாசமாக பேசுவார்கள்" என்று பேசினார்.