ஆபாசத்தலமான கிளப் ஹவுஸ்.. இரவில் காமலீலை பேச்சு.. அதிரவைக்கும் ஆடியோ.!
சமூக வலைத்தளங்கள் நம்மிடையே அறிமுகமானத்தில் இருந்து பல நல்ல விஷயங்களை தெரிந்துகொண்டு வந்தாலும், சில விஷயங்கள் வாழ்க்கை முறையில் பெரும் தாக்கத்தையும், சீரழிவையும் ஏற்படுத்துகிறது. இது செல்போன் அறிமுகத்திற்கு பின்னர், கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் கிளப் ஹவுஸ் என்ற செயலி மூலமாக முதலில் பெண்ணியவாதிகள் இணைந்து பெண்ணிய கருத்துக்களை பேசி வந்த நிலையில், பின்னாளில் அது கவர்ச்சி பேச்சுகூடமாக மாறியுள்ளது.
ஆண்களும், பெண்களும் தங்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொள்வதும், பெண்களை ஆண்கள் கலாய்ப்பதும், ஆண்களை பெண்கள் கலாய்ப்பதும், அந்தரங்க உறுப்புகளுடன் இணைத்து பேசுவதும் என தொடர்ந்து வருகிறது.
பெண்ணியம் என்பது அவர்களின் உரிமையை பெறுவதற்கான ஒரு வழி என்பதை மறந்து, சமூக விரோத கூட்டத்தால் அவை மடைமாற்றப்பட்டு உல்லாசம் மட்டும் என்பதை போல பார்வை ஏற்பட்டு, பலரும் தங்களின் மதியை இழந்து செயல்பட்டு வருகின்றனர் என உண்மையான பெண்ணிய ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற பிற சமூக வலைத்தளங்களை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.