"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு.! மொத்த எண்னிக்கை 309 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 234 ஆக இருந்த நிலையில், தற்போது 309 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா பாதிப்பால் இதுவரை உலகளவில் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடாக இருந்த கொரோனா கடந்த ஒருசில நாட்களாக பல மடங்கு அதிகரித்துள்ளது. நேற்றுவரை 234 ஆக இருந்த நிலையில், தற்போது 309 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 1,103 பேர் தானாக முன்வந்து தகவல் தெரிவித்தனர். அதில் 658 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது, எஞ்சியுள்ளவர்களுக்கும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் முடிவுகள் வெளியாகும் என கூறியுள்ளார்.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். மற்றொருவர் சென்னையைச் சேர்ந்தவர்.