குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பின்தங்கிய தமிழகம்.! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.!



Tamil Nadu lags behind in breastfeeding children

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறுமாதங்கள் வரை எந்த இணை உணவுமே இல்லாமல் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றுதான் மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் பெண்கள் கர்ப்பகாலத்திலேயே பலவீனமாகிவிடுகிறார்கள். பிரசவகாலத்தில் இது அதிகமாகிறது. அதற்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போதும் தாய் சேய் இருவருக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறையாவதும் உண்டு.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான கருத்தரங்கில் தமிழகம் பின்தங்கி இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. அதில் பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் 54.7 சதவீத குழந்தைகளுக்கே தாய்ப்பால் கொடுக்கப்படுவதும், 6 மாத காலத்திற்கு 48.3 சதவீத குழந்தைகளுக்கே தாய்ப்பால் கொடுக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. மேலும், 6 முதல் 8 மாதக் குழந்தைகளுக்கு உணவுகளுடன் தாய்ப்பால் கொடுக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

child

அதேசமயம், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த 15 சதவீதத்தை விட தமிழகத்தில் அதிக அளவு சிசேரியன் முறை குழந்தைப் பேறு நடைபெறுவது தெரியவந்துள்ளது. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக 34 சதவீதம் குழந்தைப் பேறு சிசேரியன்(அறுவை சிகிச்சை) முறையில் நடைபெறுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.