திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கனமழை எதிரொலி.. இந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..
தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த பலவாரங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. தற்போது தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், தேனி, தென்காசி, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.
அதேபோல் திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.