'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!
சொடக்கு மேல சொடக்கு போடுது பாட்டுக்கு நடனமாடி அசத்திய தமிழ் டீச்சர்!
அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியை ஒருவர் நடிகர் சூர்யா பாடலுக்கு நடனமாடியப்படி கல்வி கற்பித்த காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் ஆகப் பணியாற்றுபவர் கவிதா. மாணவர்கள் கொரோனா அச்சுறுதலால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்பி உள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் புது விதமான மற்றும் புத்துணர்ச்சியுடன் கல்வி கற்பத்தலில் புதிய யுத்தி ஒன்றை கையாண்டுள்ளார்.
அதில் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் பொருட்டு நடிகர் சூர்யா நடித்து வெளியாகி பிரபலமான 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுக்கு நடன அசைவுகளைப் பயன்படுத்தி 'க, ங, ச...' பயிற்றுவித்து அசத்தியுள்ளார்.
பாடலுக்கு நடனமாடியப்படி மாணவர்களும் உற்சாகமாக பாடங்களைக் கற்றுள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி ஆசிரியை கவிதாவின் நடனத்திற்கும், கல்வி கற்பித்த அழகிய முறைக்கும் பலரும் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்....