அன்று கார்பரேட்டுக்கு எதிர்ப்பு., இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் - திமுகவின் தடாலடி ஆக்சன்.!



Tamilandu Lulu Company Investment Corporate Action DMK Govt

கடந்த காலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கிய திமுக, அரசாட்சிக்கு வந்ததும் அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர் ஒருவருடன் துபாய் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் சென்றிருந்தார். அப்போது, லூலூ குழுமத்துடன் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, ரூபாய் 3,500 கோடி முதலீட்டில் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால்கள் தொடங்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. 

முதல்வரின் துபாய் பயணத்தின்போது முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராக இருக்கும் யூசுப் அலியின் லூலூ குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது. கடந்த காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது வணிக வளாகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் துவங்க அதே திமுக கார்ப்பரேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 

dmk

திமுக தலைமையிலான தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக வியாபாரிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், முதல்வரின் துபாய் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சபரீசன் மற்றும் தொழிலதிபர் யூசுப் அலி செய்துள்ளது அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரியவருகிறது.