மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு விதித்த இறுதி கெடு நெருங்குகிறது; பணிக்கு திரும்புவார்களா ஆசிரியர்கள்...?
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 22ம் தேதி முதல் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொடக்கப் பள்ளிகளை அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க கூடாது என்பது தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் அரசு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் வெள்ளிக்கிழமை மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளால் மாநிலம் முழுவதும் இதுவரை 450 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்த இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படி பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 450 ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் நேரடியாகவோ அல்லது எஸ்.ம்.ஸ், வாட்ஸ் ஆப் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.