மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறுமா? வலுக்கும் சிக்கல்.!
தமிழகத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவராக இருந்து வந்த கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னாள் முதலர்வர் கருணாநிதியின் தொகுதி என்பதால் பல்வேறு கட்சிகளும் தன் வசம் அந்த தொகுதியை இழுக்க முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிமுகம் செய்ய தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை திமுகவும் தனது வேட்பாளரை அறிமுகம் செய்தது.
ஆனால், கஜா புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களில் ஒன்றாக திருவாரூர் தொகுதியும் உள்ளது. இந்நிலையில் பாதிப்படைந்த மாவட்டங்களுக்கு அரசு சார்பாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அந்த நிவாரணம் திருவாரூர் தொகுதிக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகள், மாவட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசனைகளை பெற்ற பிறகு மாவட்ட தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.