மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உள்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு; தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.!
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் தற்போது இம்மாத தொடக்கத்திலிருந்தே அதிகரிக்க தொடங்கிய வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது எப்போது வீடு திரும்பலாம் என்ற யோசனையாகவே மக்கள் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உள்தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், பெரம்பலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 தமிழக உள்மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தமிழக வானிலை பற்றி கூறும்போது: தமிழக உள் மாவட்டங்களான விருதுநகர், நீலகிரி, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வரும் வாரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கிலிருந்து வரும் காற்றும் கிழக்கிலிருந்து வரும் காற்றும் ஒன்றுக்கொன்று மோதுவதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் சென்னையை பொறுத்தவரையில் வரும் வாரங்களில் தற்போது நிலவும் வெப்ப நிலையே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.