தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளில் விவசாயிகளுக்கு பயிற்சி; விவசாயத்தை வேற லெவலில் எடுத்துச்செல்ல அசத்தல் அறிவிப்பு.!
பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தை மானியத்தில் வழங்குவதற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பேசியவை பின்வருமாறு,
வெளிநாட்டு தொழில்நுட்பத்தை அறிந்து தமிழ்நாட்டில் அதை கொண்டு வர பயிற்சி பெற ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உட்பட வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டு விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
பள்ளி மாணவ - மாணவிகளிடையே வேளாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்த பண்ணை சுற்றுலாவுக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஏற்காடு தாவரவியல் பூங்கா, மாதவரம் தோட்டக்கலை பூங்காவை தரம் உயர்த்த ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது.
உலகளவிலான சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு அடையாளம் உருவாக்க ரூ.130 கோடியில் தனித்தொகுப்பு அமைக்கப்படும். பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 10 இலட்சம் பனை விதைகள் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிள்ளிகுளத்தில் ரூ.15 கோடி செலவில் பனை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தை மானியத்தில் வழங்குவதற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இயந்திரங்களை பழுதுபார்க்க 200 ஊரக இளைஞர்களுக்கு ரூ.50 இலட்சம் செலவில் பயிற்சியும் வழங்கப்படும். டிராக்டர் உட்பட வாகனங்களை இயக்க 500 இளைஞர்களுக்கு ரூ.1 கோடி செலவில் பயிற்சி வழங்கப்படும். வைகை, மேட்டூர் அணைகளை பராமரிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.