மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் உருவாகிறது மேலும் ஒரு புதிய மாவட்டம் !. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 5 தாலுகாக்களை உருவாக்கி கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ குமரகுரு ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சியை தனிமாவட்டமாக அறிவித்தார். விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக உருவாக்கப்பட இருப்பதாக அறிவித்தார்.
மேலும் புதிதாக உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் என்று தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்தநிலையில் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி தமிழகத்தில் உருவாக இருக்கிறது.