மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளுக்குநாள் அதிகரிக்கும் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை! நிரந்தர தீர்வு காண தமிழக முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு!!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் அதிகரித்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை பற்றாகுறை போன்றவை ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்சிஜன், தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் துவக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
உயிர்வளி, தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) May 18, 2021
தயாராக உள்ள நிறுவனங்களிடமிருந்து#TIDCO நிறுவனம் விருப்பக் கருத்துகளைப் பெற்று ஆலைகளை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கும்.
தமிழகம் தன்னிறைவு அடையும். #COVID19 pic.twitter.com/VH2ZwehJ5q
இதனடிப்படையில் தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), மேற்காணும் அத்தியாவசிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என்றும், குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கருத்துகளை 31-5-2021-க்குள் கோரியுள்ளது.
அவ்வாறு பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.