தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர்... ஏன், எதற்கு தெரியுமா.?
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை இன்று தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மாலை 4 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதில் தமிழ் நாட்டில் சர்வதேச செஸ் போட்டியை நடத்துவதற்கு அனுமதி தந்ததற்கும், போட்டியை தொடங்கி வைக்க நேரில் வந்தமைக்கும் நன்றி தெரிவித்தார்.
பின்னர் தமிழ்நாட்டு நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனு ஒன்றை அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின். மேலும் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.9,602 கோடி ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை விரைந்து தருமாறும் அப்போது வலியுறுத்தியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா மீது விரைந்து முடிவெடுத்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.