ரயில் மற்றும் விமான சேவை தமிழகத்திற்கு வேண்டாம்! பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!



tamilnadu-cm-request-to-pm

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், தமிழகத்துக்கு 31-ந்தேதி வரை ரயில், விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று, பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக இந்தியாவில் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றளவும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை கடும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது ஆனாலும் இந்த பாதிப்பு குறையவில்லை.

modi

இந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல் அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அவருடன் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைசர்கள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இருந்தபடி ஆலோசனையில் பங்கேற்றார். இதேபோல் மற்ற மாநில முதலமைச்சர்களும் ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகத்துக்கு 31-ந்தேதி வரை ரயில், விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.